சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில்முத்துமலைமுருகன் சிலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கியது. தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
Location : pinned https://g.co/kgs/TfhZyP
உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில்உள்ளது. தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 146 அடி உயரத்தில்அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனைபடைத்துள்ளது.
எனவும்தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள முருகன் கோயில் வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த திருக்கோயில்கட்டப்பட்டுள்ளது
இதுகுறித்து கோவிலை உருவாக்கிய தொழிலதிபர் ஸ்ரீதர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயிலில் மண்ணை எடுத்து வந்துஆறுபடை முருகன் திருக்கோயில் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கியதாகவும், குறிப்பாகதிருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை திருத்தணி சுவாமிமலை பழனி போன்ற திருக்கோயில் மண்ணைகலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயில் வடிவமைத்து உள்ளதாகவும்தெரிவித்தார்.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறஉள்ளதாகவும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மடாதிபதிகள் கலந்துகொண்டு ஆசி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக தருமாபுர ஆதீனம், பேரூர் ஆதினம் ரத்தனகிரி சாமிகள், மலேசியாவிலிருந்து பாலகிரிசாமி ஆகியநான்கு மாடாதிபதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்த அவர்,
மலேசியாவில் உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அமைய வேண்டும் என்பது எனதுதந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
கும்பாபிஷேகத்தை பொருத்தவரையில் சமூக இடைவெளியோடு முருகனை தரிசிக்கும் வகையில் அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தீர்த்தம் அனைத்தும் பக்தர்களும் மீதும் விழும் வகையில்ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் முருகனை ஹெலிகாப்டர் மூலம் அருகில் சென்று பார்க்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு தொடர்ந்து பூஜைகள் நடத்த கட்டளைதாரர்கள் வரவேற்கப்படுவதாகதெரிவித்த அவர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும்
No comments:
Post a Comment